இதே கோடையில் உங்கள் கூந்தலை பராமரிக்க….

0
545

அழகுக் குறிப்புகள் :
வெயிற்காலக் குறிப்புகள் :
இந்தக் கோடையில் உங்கள் கூந்தலைப் பராமரிக்க எளிய வழி. வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு நம்மை அழகாக வைத்து கொள்ளலாம்.
சுட்டைத் தணிக்க :
கோடைக் காலம் என்பதால் உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் நம்மைத் தாக்கும் அதை எளிய வழியில் கையாள இதோ சில வழிகள்….
கறிவேப்பிலை :
முட்டை மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் ஒன்றாக கலந்து வெயிலில் நன்றாக காயவைத்து அதை பொடி செய்து வாரம் இருமுறைக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும் சுட்டைத் தணித்து புத்துணர்ச்சி பெறும்.
செய்முறை :-
முட்டை உடைத்து அதை நன்றாக கலந்து பின் கறிவேப்பிலை இலைகளை அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதை ஒரு தட்டில் அல்லது ட்ரேயில் ஊற்றி வெயிலில் பத்து நாட்கள் மேலாக காயவைக்க வேண்டும், எறும்புகள் அதில் வராமல் இருக்க தட்டைச் சுற்றி மஞ்கள் பொடி தூவ வேண்டும், தினமும் அதை கிளறிவிட வேண்டும் நன்றாக காய்ந்தபின் அதை பொடிச் செய்து பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை :-
அரைத்த பொடியுடன் தயிர் கலந்து தலையில் தடவி ½ மணிநேரம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
பின்குறிப்பு :-
தண்ணீரின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் வேறுபடும், அதில் உள்ள காரத்தன்மை குறைக்க(apple cidar ) அதை வாங்கி நீங்கள் குளிக்கம் நீரில் ஒரு மூடி அளவு ஊற்றி பின் குளித்தால் முடி உதிர்வை தவிர்க்க முடியும். இந்த குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் share செய்யவும், like செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here