சோம்பு-வின் உள்ள மூலிகை மருத்துவம் பயன்கள்…!!

0
596

சோம்பு-வின் உள்ள மூலிகை மருத்துவம் பயன்கள் : நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையில் ஒன்று. இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக காணப்படுகின்றன. சோம்புவின் தோல் சுருக்கத்தை போக்குகின்றது.
செரிமானத்தை தூண்டக்கூடியது. இவை இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் புற்றுநோய்க்கு காரணமான நச்சுக்களை வெளியேற்றுகிறது. கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. கண்பார்வை குறைபாட்டை குறைக்க நோம்பு உணவாக பயன்படுகிறது.

கால் வீக்கத்தை குறைக்கும் :

தேவையான பொருட்கள்: சோம்பு தனியா

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதனுடன் தனியா பொடி மற்றும் சோம்புவின் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்துவர கால்வீக்கம் குறையும். இது உடலில் உள்ள தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றும்.
சோம்புவை உபயோகித்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருந்து:
தேவையான பொருள்: சோம்பு, நெல்லி வற்றல், கற்கண்டு
செய்முறை:
நெல்லிவற்றல் 10 வரை எடுத்து ஊறவைக்கவும். அதனுடன் சோம்புவின், சிறிது பணங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டு தினமும் ஒருவேளை குடித்துவர தோலில் ஏற்படும் சுருக்கம் சரியாகும்.
இரத்தத்தை சீராக்கி உடலை பளப்பளப்பாகும்,பொலிவு ஏற்படும்.
செரிமானத்தை தூண்டக்கூடிய தன்மை கொண்ட சோம்புவை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here