தேனில் ஊறவைத்த இஞ்சி – நாட்டு மருத்துவம்!!

0
593

48 நாட்கள் தேனில் ஊறவைத்த இஞ்சி – நாட்டு மருத்துவம் : இந்த உலகத்தில் இஞ்சி இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது: பசிக்காது.
சமையல் நிபுனர்களுக்குத்தான் தெரியும். இந்த இஞ்சை ஆங்கில மருத்துவர்கள்கூட சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இஞ்சை ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து “ஜிஞ்ஜர் பெரீஸ்” என்ற மருந்தை கண்டுபிடித்து அதை மிக்ஸர்களில் கலந்து செரிமானதிற்கு பயன்படுத்துகின்றனர்.

தேனில் ஊறவைத்த இஞ்சி
தேனில் ஊறவைத்த இஞ்சி

இஞ்சி மற்றும் வெள்ளை வெங்காயம் இரண்டும் சிறிதளவு, தேன் சிறிதளவு இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு அரை அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால், அடிக்கடி வாந்தி, குமட்டல் மற்றும் பித்த மயக்கம் நீங்கும்.
இதில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதில் மாதுளம் பழச்சாறு சேர்த்து கொடுத்தால் இருமல், இரைப்பு (ஆஸ்துமா) குணமாகும்.
இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோல்களை முழுமையாக நீக்கிவிட்டு அரு கண்ணாடி பாட்டிலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு அதில் 450 கிராம் தேனை ஊற்றி.
நான்கு நாட்கள் ஊறவைத்த தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகி பித்தம் குறைந்துவிடும், ஆயுள் பெருகும் முகப்பொலிவும், அழகும் உண்டாகும்.
வேம்பு காயல்கல்பம் போன்று இதுவம் ஒரு காயகல்பம் முறையே இங்சி மறபா.
மேலும் பல நன்மைகள்:
மலபார் இஞ்சி மறபா பெயர் பெற்றது. இஞ்சியை நன்றாக பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி தயாரிப்பதுதான் இஞ்சி மறபா.
இது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு தொல்லை வரும்போது இது கைகொடுக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு:
சுமார் 15 கிராம் இஞ்சி, வெள்ளெருக்கன் பூ 3 மிளகு 10 இவை அனைத்தையும் ஒன்றாக ஒன்றாக சேர்த்து நசுக்கி அதில் 3 டம்ளர் நீலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதை வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்து வர காசம் .
இரைப்புக்கும், சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைந்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும் போது இந்த கஷாயத்தை காலை மாலை என நோய் தீரும் வரை குடிக்கலாம்.
இஞ்சி கஷாயம் கால் டம்பளரில் 20 கிராம் கற்கண்டு தூள் சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து இதை அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் பித்த ரோகங்கள்.
பித்தம் சம்பந்தப்பட்ட வாயு பிரச்சனை மற்றும் பித்த சம்பந்தபட்ட எல்லா நோய்களும் குறைந்துவிடும்.
அதுமட்டுல்லாமல் டயாபடீஸ் என்ற நீரிழிவு வறட்சியை போக்கி அடிக்கடி சிறுநீர் போவதும் நின்றுவிடும்.
அதுமட்டும் இல்லாமல், எரி குன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல், குடைச்சல் வலிகளும் நீங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here