இந்த பாடலை எழுதியவர் யார் தெரியுமா?

0
639

இந்த பாடலை எழுதியவர் யார் தெரியுமா?
கவிப்பேரரசு:
பெயரை கேட்க்கும் போதே ஒரு கர்வம் வருகிறது அல்லவா? இந்த பெயர் பல சாதனைகளை செய்துள்ளது. இந்த பெயர் பல கோடி மக்களை தன் வசம் கொண்டுள்ளது. இந்த பெயருக்கு ஒரு காந்த சக்தியுள்ளது. வருணிக்க வார்தையில்லா பெயர் ஆம் அவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இவரின் “ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” என்ற பாடலை கேட்டேன் மெய் மறந்தேன்.
உயிரின் நியதியை
உவப்பிலா மொழியினில்
உயர்கவி வரைந்த
கவிஞர் வாழ்க
எந்தன் வகுப்பறை
சீவனில் கலந்தே
சிந்தை நிறைந்தது. என்றொருவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது நினைவில் நிற்கிறது.
இதோ வாழ்வின் அர்த்தம் சிந்தும் அந்த பாடல் வரிகள்:
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!
ஞானத்துவம்:
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “Knowledge without practice makes a half man” என்று.
இவருடைய அனுபவமா பக்குவமா இப்பட்டிப்பட்ட வரிகளை அவர் உற்றெடுத்து தருவதற்கு காரணமாக அமைத்தது. எளிய நடை, முதிர்ந்த ஞானியின் கருத்து, அள்ளி சுவைத்திட அழகான தமிழ், எண்ணிஎண்ணி பார்க்கிறேன், வேண்டுகிறேன் தமிழ் தாயை இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் கொடு இந்த கவிஞனை பாராட்டவென்று.
எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத வரிகள், வாழ்க்கையில் தான் என்ற அகந்தை கொண்டவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பாடம். வாழ்க கவிப்பேரரசு வளர்க அவர் தமிழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here