சர்ச்சையில் சிக்கியதா Google இது என்ன கூகுளுக்கு வந்த சோதனை..!

1
133

*சர்ச்சையில் சிக்கிய google:

கூகிள் மேப்ஸ்:

google : சர்ச்சை என்ற வார்த்தையிலிருந்து தப்பித்து வந்த நிறுவனமான கூகிள் தற்பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. கூகிள் நிறுவனத்தின் ஒரு ஆப்ஸ் கூகிள் மேப்ஸ் இந்த ஆப் தான் சர்சைட்யில் சிக்கியுள்ளது.
நாம் வேறு ஊருக்கோ அல்லது ஏதேனும் புதிய இடத்திற்கு சென்றால் நமக்கு வழிகாட்ட நாம் பெரும்பாலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவோம்.
இந்த அம்சம் நம்மையும் கண்காணிக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம் இந்த சேவை நாம் செல்லும் இடம் அனைத்தையும் சேகரிக்கிறது என்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

google serach
google
அஸோஸியேட் பிரஸ்:

கலிபோர்னியாவில் உள்ள அஸோஸியேட் பிரஸ் என்ற நிறுவனம் தான் கூகிள் மீது வழக்கு பதிவிட்டுள்ளது.
இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் கூகிள் நிறுவனமானது மக்களுக்கு தெரியாமலே அவர்களின் இருப்பிடம் மற்றும் செல்லும் இடங்கள் அனைத்தையும் சேகரிக்கிறது என்று கலிபோர்னியா நீதிமன்றத்தில் கூகுளை மீது வழக்கு பதிவிட்டுள்ளது.

google-logo
google-logo
தகவல் தொழில்:
 • சமீபத்தில் இரும்புத்திரை என்ற திரைப்படம் பார்த்திருப்போம் அதில் நமது தகவல்களை திருடி அதனை அப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று காண்பித்து இருப்பார்கள்.
 • இதுபோல் பல நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை திருடிக்கொண்டு தான் இருக்கிறது.
 • இதில் கூகிள் நம்பகத்தன்மையுடன் செயல் படும் இனைய சேவையாகவே பார்க்கப்படுகிறது.
 • ஆனால் தற்போது இச்செய்தி பலரையும் அச்சுறுத்தும் வையாகவே அமைந்துள்ளதாக இணைய சேவையை பயன்படுத்துவோர் கருதுகின்றனர்.
எப்படி செயல்படுகிறது:
 • ஜி பி எஸ் என்னும் வசதி நம்முடைய சுமார்ட் போன்களில் உள்ளது, இது தான் நாம் இருக்கும் இடத்தை செயற்கைகோள் உதவியுடன் கண்டறிய உதவுகிறது.
 • நாம் எங்கெல்லாம் செல்கிறோம் நமக்கு அருகாமையில் என்னென்ன பெரிய கட்டிடங்கள் உள்ளது,
 • நாம் எந்தெந்த பெரிய புகழ்பெற்ற இடங்களுக்கு செல்கிறோம், எந்த வாகனத்தில் செல்கிறோம், அதாவது காரிலா, பைகிலா அல்லது நடந்து செல்கிறோமா, என்பதை கூட கண்டறியும் இந்த ஆப்.
 • அது மட்டுமல்லாமல் நாம் எந்த தேதியில் எத்தனை மணிக்கு எங்கு இருந்தோம் என்பதையும் சேகரிக்கிறது என்பது தான் குற்றசாட்டு.
செட்டிங்ஸ்:

இந்த சேவையை நாம் நிறுத்தி வைக்கும் ஆப்சனும் உள்ளது. அதாவது நம்முடைய போனில் கூகிள் மேப்ஸ் அப்ளிகேஷனில் உள்ள செட்டிங்சில் லொகேஷன் ஹிஸ்டரி என்ற சேவையை நிறுத்தி வைத்தால் இந்த ஆப்பால் நம்மை கண்காணிக்க முடியாது. கூகுளுக்கு நாம் எங்கெல்லாம் செல்கிறோம் என்பதை சேகரிக்க முடியாது.

google map
google map
நிறுத்தினாலும் இயங்குகிறது:
 • நாம் இந்த ஆப்பிள் லொகேஷன் ஹிஸ்டரி ஆப்ஷனை ஆப் செய்த போதும் கூகிள் மக்கள் செல்லும் இடங்களை கண்காணித்துள்ளது என்பது தான் குற்றசாட்டு.
 • தொடர்ந்து மக்களின் விபரங்களை சேகரித்து வந்ததுடன் அவர்களின் அனுமதியின்றி நாம் எங்கு செல்கிறோம் என்பது உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்துள்ளதாக அஸோஸியேட் பிரஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
 • உண்மையில் நாம் இந்த ஆப்பினை நிறுத்தி வாய்த்த பிறகும் இது இயங்குகிறது. இங்கு தான் கூகில் தவறு செய்துள்ளது.
 • இதன் காரணமாகவே இந்நிறுவனம் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
 • எனவே அஸோஸியேட் பிரஸ் நிறுவனம் இதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளது.
பழைய மெத்தடுத்தான் பெஸ்ட்:

நம் தகவல்கள் திருடப்படாமல் இருக்கவும், நாம் தேவையற்றவர்களால் கண்காணிக்க படாமல் இருக்கவும், நம்முடைய தனிப்பட்ட ரகசியங்களையும், நம்முடைய அந்தரங்கங்களையும் பாதுகாப்பாக வைக்க சிறந்த வழி ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு நம் முன்னோர்கள் போல் டைரியில் நம் குறிப்புகளை எழுதி நம் வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்வது தான் என்ற எண்ணம் தற்பொழுது பலரின் மத்தியிலும் வந்துவிட்டது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here