வீட்டில் உள்ள கஷ்டங்கலும், கடன் தொல்லையும் தீர..!

0
626

தேடிவருவாள் வரலக்ஷ்மி

இந்துமத புராணங்கள்:

மஞ்சளை : ஒவ்வொரு பண்டிகைகளுக்கு, நோம்புகளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. செல்வம் சேர்ந்திட, செழிப்போடு வாழ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க இன்று கொண்டாடப்படும் வரலக்ஷ்மி நோம்பிற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.

lakshmi
lakshmi
  • இப்பதிவினில் நாம் வரலக்ஷ்மி விரத பூஜைகள் அப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பாப்போம்.
  • நமது புராணங்கள் கூறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், ஐதீகங்களும் நம் முன்னோர்களால் ஆழ்ந்த அறநெறி காணோட்டதோடு தொடர்பு உடையதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
  • ஆன்மிகமும் அறிவியல் ஒன்றோடுஒன்று கலந்த சம்பிரதாயங்கள் கொண்ட சிறப்பு நம் இந்து மதத்திற்கு உண்டு. விரதங்களுக்கெல்லாம் தலையாய விரதமாக கருதப்படுவது வரலக்ஷ்மி நோம்பு அல்லது வரலக்ஷ்மி விரதம்.
  • பதினாரு பேறுபெற்ற செல்வத்திற்கும் அதிபதியான ஸ்ரீமன் நாராயணனின் துணைவியான லக்ஷ்மிதேவியை வழிபாடு அன்னையின் அருள் வேண்டி விரதமிருந்து லட்சுமி தேவியை வழிப்படும் நாளே வரலக்ஷ்மி நொம்பாகும்.
  • இந்நோபானது ஆடி மாதத்தில் வரும் பொர்ணமி முந்தைய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.
  • அதன் முதல் நாளான வியாளர்க்கிழமை அன்று வீடுகளை சுத்தம் செய்து லட்சுமி தேவியை வாசலை நோக்கி வைப்பார்கள்.
மாவிலைத் தோரணம்:
  • இந்துக்களின் பண்டிகைகளில் முதலில் இடம் பிடிப்பது மாவிலை. இம்மாவிலைக்கு கிருமிகளை எதிர்க்கும் சக்தி உண்டு.
  • அது மட்டுமின்றி துர்த்தேவதைகள், துஷ்ட சக்திகளை இது வீட்டினுள் அனுமதிக்காது என்பதும் ஐதீகம்.
  • பண்டிகை காலங்களில் வீட்டின் வாசலை மாவிலை அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
  • வரலக்ஷ்மி நோபு அன்றும் வீட்டின் வாசலிலும் பூஜை அரையிலேயும் மாவிலை கட்டப்படவேண்டும்.
ஐஸ்வர்யம் தரும் ஐஸ்வர்யக்கோலம்:

ஐஸ்வர்யா கோலம்தான் வரலட்சுமிக்கு உகந்த பிடித்த கோலமாக கருதப்படுகிறது.

Lakshmi
Lakshmi
கலசம் அலங்கரிக்கும் முறை:

பூஜை பொருட்களில் மிக முக்கிய இடம் பிடிப்பது கலசம், பித்தளை, வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வைப்பது சிறந்தது.
கலசத்தில் அரிசி, மஞ்சள், ஒரு நாணயத்தையும் போடா வேண்டும் பிறகு தண்ணிர் ஊற்றி அரிசி நிரப்பிய ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
பிறகு மஞ்சள் பூசப்பட்ட தேங்காயினை மாவிலை சொருகப்பட்ட கலசத்தில் வைக்க வேண்டும்.

மஞ்சளை
மஞ்சள் பூசப்பட்ட தேங்காயினை மாவிலை
நெய்வேதியம் செய்யும் முறை

வரலக்ஷ்மி நோம்பு அன்று அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்வதற்கு, அரிசி, பருப்பு, நெய்யிட்ட அன்னம், பச்சைஅரிசி இட்லி, கொழுக்கட்டை, பருப்புபாயாசம், அப்பம், வடை முதலியவை.
இப்பணிக்காரங்களை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வது மிகவும் உகந்தது. சிலர் இனிப்பு பண்டங்களையும் வைத்து நெய்வேத்தியம் செய்வர்.
நாம் கிழக்கு திசையினை நோக்கி மங்கள காரியம் செய்வது உத்தமம் .
சூரிய கடவுள் தான் நம்முடைய பிரதான கடவுள் விநாயகரையும் கிழக்கு நோக்கியே வைத்து வணங்குவோம்.

வரலக்ஷ்மி
வரலக்ஷ்மி

எனவே நாம் வரலக்ஷ்மி நோம்பன்று கலசத்தையும் கிழக்கு நோக்கியே வைத்து வணங்க வேண்டும்.
விரதங்கள் அனைத்திலும் மஞ்சளுக்கு தான் மிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மஞ்சள் கயிறு , மஞ்சள் பூசப்பட்ட தேங்காய், மஞ்சளில் பிடிக்கப்பட்ட பிள்ளையார் என்று அனைத்தும் பூஜைகளில் மஞ்சளில் தான் அமைத்திருப்போம்.
இந்த மங்கள நாளில் பெண்கள் தங்கள் உற்றார் உறவினர்களை அழைத்து மங்கள பொருட்களை வழங்குவதும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here