பாதுகாப்பற்ற ஸ்மார்ட் போன்கள் அது உங்க போன் கூட இருக்கலாம்..!

0
732

தற்போது விற்பனையில் உள்ள ஸ்மார்ட் போன் களில் அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய போன்கள் பற்றிய தகவல்களை ஜெர்மனியை சேர்ந்த கதிர்வீச்சு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.பாதுகாப்பற்ற ஸ்மார்ட் போன்
இது குறித்த கூடுதல் விபரங்களை தற்போது பார்க்கலாம்.
உலகிலேயே அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் தயாரிக்கப்படும் சியோமி MI A 1 போன் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
சீனாவில் தயாரிக்கப்படும் ஒன் ப்ளஸ் 5T மொபைல் அதிக கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. ஒன் பிளஸ் 5T-க்குப் பிறகு அடுத்த ஐந்து இடங்களிலும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைலின் Huawei மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
எட்டாவது இடத்தில் ஒன் ப்ளஸ் 5  மொபைலும்,ஒன்பதாவது இடத்தில் Huawei P9 மொபைலும் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள IPHONE கம்பெனி தயாரிக்கும் iphone 7 கதிர்வீச்சை வெளியிடும் மொபைலில் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.
ஆபத்தான கதிர்வீச்சு வெளியேற்றும் முதல் 15 மொபைல்களில் 12 சீனாவில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்பு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கண்டு வாங்குவதே நல்லது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் ரேடியேஷன் அளவை பார்ப்பதற்கு அதிலுள்ள அட்டைப்பெட்டியில் SAR என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அளவை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் ரேடியேஷன் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போனின் SAR அளவீடு 1.6 Watts-க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
அதற்கு அதிகமாக இருக்கும் ஸ்மார்ட் போனை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் இது போன்ற சுவாரசியமான பயனுள்ள தகவலுக்கு நமது பக்கத்தை ஃபாலோ செய்ய மறந்துடாதீங்க!
For more article : Tamilantimes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here