பருக்களை தடுக்கும் 3 மருத்துவ பொருள்..!

0
115

பருக்களை: நம் முக அழகைக் கெடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது பருக்கள் தான். இது நமக்கு பெரும் வலியை தருவது மட்டுமல்லாது முகத்தில் தீராத தழும்பையும் தரக்கூடியது.How to make a mask பருக்களை
இப்படிப்பட்ட பருக்கள் வருவதற்கான காரணம் நம் முகத்தில் வடியும் என்னையும் அதில் சேரும் அழுக்கு தான். அதுமட்டுமல்லாது இறந்துபோன செல்களும் இதில் சேரும்.
இந்த பிரச்சனையை போக்க வெறும் வீட்டில் உள்ள நல்லெண்ணெய் இருந்தால் போதும்.
பொதுவாக நம் வீட்டில் பயன்படுத்தும் நல்லெண்ணெயில் பலவிதமான விட்டமின்கள் இருக்கிறது.
உதாரணமாக இ, டி , பி போன்ற வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இது ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருளாக கருதப்படுகிறது.
இது நம் சருமத்தில் ஏற்படும் பருக்களை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் நல்லெண்ணெயில் ஈரப்பதம் இருப்பதால் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை தந்து நம் சர்மத்தை பட்டு போல் வைத்துக் கொள்ள பாதுகாப்பாக ஒரு படலத்தை ஏற்படுத்துகிறது.zhirnogo-bleska-na-litse

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க :

நம் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு முதலில் நம் முகத்தை நீரால் காட்ட வேண்டும்.
இது நம் முகத்தில் உள்ள துவாரங்களை திறப்பதற்கு உதவியாக இருக்கும்.
அதன் பின் ஒரு காட்டன் பஞ்சை எண்ணெயில் நனைத்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளவும். அதனை 20 நிமிடம் அப்படியே ஊறவைத்து விடவும்.
பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி நன்றாக துடைத்து விடவும். இதுபோல் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அந்த நல்லெண்ணெய் மூலம் அகற்றப்படும்.

நல்லெண்ணெய் மஞ்சள் மாஸ்க் :

மஞ்சள் பொதுவாக ஆன்ட்டிபயாட்டிக் பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். இது காயங்களை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த மஞ்சளுடன் நல்லெண்ணெய் 4 ளில் 3 பங்கு சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் தடவ வேண்டும்.
இதுபோல் தடவி வந்தால் நம் முகத்தில் ஏற்படும் எந்தவிதமான பருக்களாக இருந்தாலும் அது காணாமல் ஓடிவிடும்.
இதனை செய்யும் முன் மேற்கண்டவாறு நான் கூறியது போல நீராவியில் முகத்தை காட்ட வேண்டும்.

பருக்களை தடுக்கும் அரிசிமாவும் நல்லெண்ணெயும் :

நம் அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய அரிசிமாவில் பலவிதமான வைட்டமின்களும் ,தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.
இது நம் முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கி பருக்கள் வருவதை தடுப்பது மட்டுமல்லாது நம் முகத்தில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.
2 டீஸ்பூன் அரிசி மாவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். இதை 25 நிமிடம் வரை ஊற வைத்து பிறகு நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும்.
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி நம் முகத்தில் ஏற்படும் அழகு குறைகளை தீர்க்க இந்த வழிமுறைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் இதுபோன்ற தகவலுக்கு நமது பக்கத்தில் ஃபாலோ செய்ய மறந்துடாதீங்க. இந்த தகவல் அனைவருக்கும் சென்றடைய இந்த தகவலை பகிரவும் மறந்துடாதீங்க.
மேலும் இது போன்ற சுவாரசியமான மருத்துவ குறிப்புகள் நமது பக்கத்தை பாலோ செய்ய மறந்துடாதீங்க Tamilantimes
இந்த மாதிரி நிறைய தொகுப்புகளை வீடியோ வடிவில் பெறவேண்டுமா : Smile Express.இது போன்ற article உடனுக்கு உடன் படிக்க நமது பக்கத்தை  subscribe செய்து கொள்ளுங்கள்…உடனடி update செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.. நம்மல follow பண்ண மறக்காதீங்க.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க .ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here