சமையலறையில் இருக்கும் தக்காளியில் இவ்வளவு நன்மைகளா?

0
133

தக்காளியில் இவ்வளவு நன்மைகளா?

தக்காளி : பலருக்கும் பல வகையில் முகங்களில் பலவிதமான பிரச்சனைகள் எழும். அந்த வகையில் முகப்பரு மற்றும் கரும்புள்ளி என்பது நம் சருமத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது.grow tomatoes
இது நம் முக அழகையும் பொலிவையும் இழக்க வள்ளது.
இதற்காக நாம் பல்வேறு பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி இருப்போம். அது அனைத்துமே நமக்கு பக்கவிளைவுகள் தரக்கூடிய ஒரு பொருளாகவே காணப்படுகிறது.
இன்று இந்தப் பதிவின் வழியாக நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய மலிவான பொருளான தக்காளியை பயன்படுத்தி இழந்த முகப்பொலிவை எவ்வாறு திரும்ப பெறுவது மற்றும் முகத்தில் ஏற்படும் பருக்களை எவ்வாறு போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.

தக்காளியில் உள்ள பயன் :

இந்த தக்காளியில் விட்டமின் சி ,போலிக் ஆசிட் மற்றும் கரோட்டினாய்டு போன்ற பொருட்களை அதிக அளவில் நிறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் ஏற்படும் முகப்பொலிவு பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.Tomatoes cut risk
மேலும் இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் முதுமைத் தோற்றத்தைப் போக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தக்காளி  ஃபேஸ் பேக் :

இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் மொத்தம் மூணு.
1. தக்காளி மசியல்
2. ஜொஜோபா ஆயில்
3. டீ ட்ரீ ஆயில்
இந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதனை பேஸ்டாக செய்து நம் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். காய்ந்த பிறகு இதனையும் நல்ல நீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இதை காலையில் வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் பயன்படுத்தி வாருங்கள்.tomatoes for skin

கரும்புலிகளுக்கான தக்காளி ஸ்கிராப் :

இதற்குத் தேவையான பொருட்கள்
1. தக்காளி
2. தயிர்
3. ஓட்ஸ்
இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் கலந்த இந்த கலவையில் சிறிது சூடு ஏற்றுங்கள். முக முழுவதும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பதினைந்து நிமிடம் பிறகு முகத்தை நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள்.
இந்த தக்காளி ஸ்கரப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவது நல்ல பலனைத் தரும். தீக்காயத்தின் தழும்பு மறைக்க தக்காளி

கருவளையங்களைப் போக்க :

மாலை நேரங்களில் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி கலவையை சிறிது நேரம் நம் கண்ணை சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால் கருவளையங்கள் வராமல் காணாமல் போய்விடும்.
இதனை நாம் தினமும் பயன்படுத்தினால் நல்லது.

பொலிவான சருமத்திற்கு :

தக்காளி சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் முழுவதும் தடவி வருவது நல்லது.
இது நம் முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்குவது மட்டும் அல்லாது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
மேற்கண்ட இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி நம் முகத்தில் ஏற்படும் பருக்கள், கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குவதற்கான சிறந்த பயன்களை பற்றி அறிந்திருப்பீர்கள்.
மேலும் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்வது மட்டுமல்லாது உங்களுக்கு மேலான கருத்துக்களையும் எங்களுக்கு கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here