வெந்தயக்கீரை உண்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!

0
159

வெந்தயமானது நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு அருமருந்தாகும். அதனால் அதனை உண்பதினால் நம் உடல் சூடு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும்.Ventayakkirai வெந்தயக்கீரை
ஆனால் வெந்தயக்கீரை உண்பதால் நமக்கு என்ன விதமான நன்மைகள் கிடைக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த பதிவின் வழியாக நாம் வெந்தயக்கீரை உண்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

வெந்தயக்கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் :

1. சிலருக்கு மலம் கழிக்கும் போது எரிச்சல் அல்லது உளைச்சல் இருக்கும்.
இதுபோல் ஏற்படுபவர்களுக்கு வெந்தயக்கீரை ஆனது நல்ல பலனை தரக்கூடியது. அதற்கு நீங்கள் வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து உண்டால் போதுமானது.
இது மலம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.Papalo
2. வறட்டு இருமல் ,வயிறு உப்புசம், பசியின்மை மற்றும் ருசியின்மை ஆகிய நோய்களை குணப்படுத்த வெந்தயக் கீரையை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து உண்டால் போதுமானது நம் அனைத்து நோய்களும் குணமடையும்.
3. முதுகுவலியால் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய முடியாதவர்கள் இந்த வெந்தயக்கீரையுடன், கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது நெய் விட்டு அதை வேகவைத்து அதை உண்டு வந்தால் இடுப்பு வலி காணாமல் போகிவிடும்.
4. மூலம் மற்றும் குடல் புண் உள்ளவர்கள் வெந்தயக் கீரையை அரைத்து சிறிது சூடு ஏற்றி அதை வீக்கம் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் நல்ல பயனை அடையலாம்.
5. கண் கட்டி ஏற்பட்டு உள்ளவர்களுக்கு இந்த வெந்தயக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்து பத்து போட்டால் அந்த கண் கட்டி விரைவில் உடைந்து விடும்.methileaves
6. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயக்கீரை நீங்கள் உண்ணும் உணவில் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் இது நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல சிறுநீரக கோளாறை குணப்படுத்துவதிலும் வல்லவன்.
7. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையை சேர்த்து உண்டு வந்தால் விரைவில் உடல் மெல்லியதாக மாறும்.
என்ன நண்பர்களே இந்த வெந்தியக்கீரை என்பதனைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் இனி வெந்தயக்கீரையை கடைகளில் பார்த்தீர்கள் என்றால் அதை விடாமல் வீட்டில் வாங்கி வந்து சமைத்து.
நம் வீட்டில் உள்ள அனைவரையும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகளை பெற நமது பக்கத்தை ஃபாலோ செய்ய மறந்துடாதீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here