வாய் புண்ணா எளிதில் குணப்படுத்த என்ன செய்யலாம்?

0
212

வாய் புண் எளிதில் குணப்படுத்த:

பலருக்கும் உடல் சூட்டாலும் விட்டமின் சி குறைபாடு இந்த வாய் புண் ஏற்படுகிறது. இதை குணப்படுத்துவதற்கு பல வழிகள் இருந்தாலும் நம் இயற்கை முறையில் எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்று பலரும் அறியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.mouth pirabalam வாய் புண்
வாய்ப்புண் நமக்கு ஏற்பட்டால் நம்மால் எந்த ஒரு உணவையும் சிரமம் இல்லாமல் உண்ணுவதற்கு ரொம்ப கடினமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது வாயில் எரிச்சல் ஏற்படும் போன்றவற்றை நம்மால் உணர்ந்து உண்ண இயலாது.
தோராயமாக ஒரு வாரத்திற்கு இது போன்ற பிரச்சினைகளை நாம் கட்டாயம் உணர கூடிய ஒரு விஷயமாகவே இருக்கும்.
இந்த பதிவின் வழியாக நாம் எளிய முறையில் எவ்வாறு வாய்ப்புண்ணை குணப்படுத்துவது.
அதுமட்டுமல்லாது வீட்டில் உள்ள பொருட்களான இயற்கையான வழிகளில் இதை குணப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவின் வழியாக நாம் காணலாம்.mouth-is-sore-beware

இயற்கை முறை :

1. ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதனால் கூட வாய் புண் எளிதில் குணமாகும். இதில் விட்டமின் சி நிறைந்து இருப்பதால் நம் வாய்ப்புண்ணை குணப்படுத்தக்கூடிய அருமருந்தாக செயல்படுகிறது.
2. வாய்ப் புண் ஏற்பட்ட பின் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு போட்டு வாயை கொப்பளிக்கலாம்.
இது வாய்ப்புண்ணில் ஏற்படும் தொற்றுக்களை கலை அழிப்பதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
3. அசைவப் பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாய்ப்புண் ஏற்படும் காலங்களில் அமிலத்தன்மையான உணவுகளை நாம் அதிகம் உண்பதால் வாய்ப்புண் குணமடைவதற்கு சிறிது காலம் ஆகும்.
4. வாய்ப்புண்ணால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியை போக்குவதற்கு சிறிது புதினா இலையை அரைத்து அந்த புண்ணின் மீது தடவினால் குணமாகும்.புதினா இலை
5. சிறிது மஞ்சள் துண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நம் வாய் புண் ஏற்படும் தொற்று மற்றும் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிப்பது இருக்கும் இது ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன்படுகிறது.
6. உடல் சூட்டினால் தான் வாய்ப்பு ஏற்படுகிறது உடல் சூட்டைத் தணிக்க இளநீர் போன்ற குளிர் மேம்படுத்தக்கூடிய பானங்களை அருந்தலாம்.
அதாவது இளநீர் புளிப்பான சுவை உள்ள தயிர், மோர் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்வதனால் கூட நம் உடல் குளிர்ச்சி அடையும்.
7. வாய்ப்புண் ஏற்படும் காலங்களில் மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதாவது மணத்தக்காளி சூப் அல்லது மணதக்காளி துவையல் போன்றவை நம் உணவில் சேர்த்துக் கொள்வதனால் கூட நம் வாய் புண் எளிதில் குணம் அடையும்.மணத்தக்காளி சூப்
8. துவர்ப்பான உணவுகளை வாய் புண் ஏற்பட்டுள்ள காலங்களில் நாம் பயன்படுத்தலாம். இது நம் வாய் புண் மேல் ஒரு மெல்லிய படலத்தை உருவாக்கி எளிதில் வாய்ப்புண்ணை குணப்படுத்த உதவுகிறது.
உதாரணமாக கொய்யா இலை, வாழை பூ, வாழை காய் போன்றவற்றை இந்த சமயங்களில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
என்ன நண்பர்களே மேலே கூறியுள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அது மட்டுமல்ல அதை கீழே உள்ள Share பட்டனை கிளிக் செய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
மேலும் இதுபோன்ற தகவலை நீங்கள் பெறுவதற்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here