பீட்ரூட் ஜூஸ் குடித்திருக்கிறீர்களா? அதன் பயன்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

0
127

பீட்ரூட் ஜூஸ் குடித்திருக்கிறீர்களா?

பீட்ரூட் இது அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு எளிய காய் வகை ஆகும். இதன் நிறம் ரத்த சிவப்பில் இருக்கும்.இதற்குக் காரணம் அதன் பயன் தான். இது ரத்தத்துக்கு உகந்த ஒரு காயாக கருதப்படுகிறது.beetjuice
அதாவது ரத்தத்தில் அணுக்களுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இது அதிகளவில் கொண்டிருக்கிறது.
இந்த பதிவின் வழியாக நாம் தினமும் பீட்ரூட் ஜூஸை உட்கொள்வதினால் கிடைக்கக்கூடிய எண்ணற்ற நன்மைகளைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

பீட்ரூட் ஜூஸின் நன்மைகள் :

1. ரத்த அணுக்களுக்கு தேவையான விட்டமின் 12, இரும்புச்சத்து ,ஃபோலேட் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
2. பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் நம் உடலில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் ரத்த நாளங்களை நன்கு விரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் இது நம் உடலுக்கு நல்ல பலனை தருகிறது.beetroot-use
3. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை தினமும் அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.இது அவர்களுக்குத் தேவையான உந்து சக்தியை கொடுக்கும்.
4. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்ஜூஸ் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
5. ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கு இந்த பீட்ரூட்ஜூஸ் நல்ல ஒரு பலனை தரக்கூடியது. இது நம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதில் வல்லவன்.
6. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பருக வேண்டும்.பீட்ரூட் ஜூஸ்
7. இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும் பீட்ரூட்ஜூஸ் நல்ல ஒரு காரணி.
8. பீட்ரூட் ஜூஸ் உடன் சிறிது பன்னீர் திராட்சையை சேர்த்து குடித்தால் உடலுக்கு பல விதமான சத்துக்கள் கிடைக்கும்.
என்ன நண்பர்களே இந்த பதிவின் வழியாக தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here