மின்னல் புயலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிகள் !

0
124

மின்னல்  புயலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிகள்:-

மின்னல் புயலில் : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த  45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகஇடி மின்னல்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் 45 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய சூழ்நிலை தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை; ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது!”-
என்னதான் red alert வாபஸ் வாங்கி இருந்தாலும் நமக்கு எப்போ வேண்டுமானாலும் புயல் அடிக்கலாம். புயலில் இருந்து காத்துக் கொள்வதற்காக சில வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.புயல்
மீட்பு குழுவினர் வந்து தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் என்பது நடக்காத காரியம். எனவே ஆபத்து ஏற்பட்டால் அக்கம் பக்கத்தினர் உங்களுக்குள் உதவி கொள்ளுங்கள்.
மின்னல், புயல் தாக்கும்போது கட்டிடங்களில் அருகே ஒதுங்கி இருக்கலாம். அது நம்மை காக்கும்.
குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளில் ஒதுங்கலாம். அதுவும் தேர்வு செய்யப்பட்ட பகுதியாக இருக்க வேண்டும். சில இடங்களில் ஒதுங்காதீர்கள் அதில் பூச்சிகள் நிறைய இருக்கும்.
அன்று முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படும். எனவே முந்தைய நாள் இரவே வீட்டில் உள்ள அனைவர்களுடைய செல்போனுக்கும் புல் சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும்.
அன்றைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஒரு நாள் முன்பே வாங்கி வைத்துக் கொள்ளவும்.செல்போனை ஆப்
வீட்டில் 4 பேர் இருந்தால் ஒருவருடைய செல்போனை மட்டும் தொடர்பில் வைக்கவும். மற்ற மூவரின் செல்போனை ஆப் செய்து வைக்கவும். தொடர்பில் இருக்கும் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனால் இரண்டாமவரின் செல்போனை ஆன் செய்து கொள்ளவும்.
மின்னல், புயல் அடிக்கும் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். ரொம்ப முக்கியமான போகணும் அவசியம் போக வேண்டிய சூழ்நிலை இருந்தால் மட்டும் பார்த்துக்கிட்டு போகவும். வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.
டிக்கட் முன்பதிவு பணம் வீணாகி விடுமே என்பதற்காக பயணம் செல்லாதீர்கள். கூடுமானவரை வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.மரங்களுக்கு அடியில்
மரங்களுக்கு அடியில் நிற்காதீர்கள், உங்கள் வாகனங்களை பார்க் செய்யாதீர்கள்.
மின்னல், புயல் அடிக்கும் நேரத்தில் செங்குத்தான மலை முகடுகளின் அருகில் இருக்கக் கூடாது.
சைக்கிள் வாரியே தவிர்க்க வேண்டும்.உயரமான பொருட்களில் அருகே செல்ல கூடாது.மின்சாரம் கடத்தும் பொருள்களிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
இயற்கையின் மாற்றம் என்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டே போகிறது. எப்போ வேண்டுமென்றாலும் மாறலாம். என்ன நடக்கும் என்பதை சொல்ல நம்மளால முடியாது.
அடிக்கடி புயல் மின்னல் வர வாய்ப்பு இருக்கு சில நேரங்களில் அந்த வாய்ப்புகள் இல்லை என்றும் மாறுகிறது.
இந்த நேரத்தில் தான் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். இக்காலத்தில் தான் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் அது உங்களுக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here