உங்கள் வீட்டில் பணம் தங்க மாட்டேங்குது !… இதை செய்யுங்க…

0
192

உங்கள் வீட்டில் பணம் தங்க மாட்டேங்குது!… இதை செய்யுங்க…

நம் வீட்டில் எவ்வளவு தான் உழைத்து சேமித்து வைத்தாலும், வீட்டில் பணம் செல்வம் தங்குவதில்லை. அதை நினைத்து வருத்தப்படுவீர்கள் தானே.பணம்
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, பரிகாரங்களும் உண்டு. அதே போல் இந்த பிரச்சினைக்கும் உங்கள் கவலைக்கும் தீர்வு, பரிகாரம் உண்டு.
மிகப்பெரிய பரிகாரமாக இருக்குமோ என்று யோசிக்க வேண்டாம் நண்பர்கள். ரொம்ப சுலபமாக நம்ப வீட்டிலே இருக்கக்கூடிய செய்ய முடிகிற ஒரு பரிகாரம் தான்.
இதை மேலை நாடுகளிலும் சில மாந்திரீக முறைகளில் பின்பற்றப்படுகிறது.
இது செய்யறதுக்கு நேரமும் காலமும் பார்க்க வேண்டிய அவசியமில்லை எல்லா நேரத்திலும் எல்லா நாட்களிலும் இதை செய்யலாம்
இதற்கென தனியே பார்க்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி நேரத்தில் இதை செய்தால் பலன் இரட்டிப்பாக ஆகும்.கண்ணாடிப் பாத்திரம்
உங்க வீட்ல உள்ள ஒரு கண்ணாடிப் பாத்திரம் இருக்கும், அந்த கண்ணாடி பாத்திரத்தில் உப்பு சர்க்கரை (ஜீனி) மற்றும் அரிசி இவை மூன்றையும் சரிசம அளவு எடுத்துக்கொண்டு அந்த கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த பொருட்கள் வைத்திருக்கும் கண்ணாடி பாத்திரத்தில், ஒரு குத்தூசி மேலே ஆகாயத்தைப் பார்த்து இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.
நாம் வைத்திருக்கும் அந்த கண்ணாடி பாத்திரத்தை கையில் ஏந்தியபடி தூக்கிக்கொண்டு அப்படியே நமது பூஜை அறையில் சென்று நமது கடவுளிடம் நம் மனதை விட்டு நம் கஷ்டங்களையும்,பூஜை அறையில்
துன்பங்களையும் போக்கி செல்வ வளம் வரும்படியும் மனம்விட்டு வேண்டிக்கொண்டு, அந்த பாத்திரத்தை கால்மிதி படாமல் ஏதோ மறைவான இடத்தில் திறந்தப்படி வைத்திருக்க வேண்டும்.
நீங்க வழிபட்ட அந்த கிண்ணத்தில் தூசிகள் படிந்தால் அதை ஓடும் நீரில் விட்டு விடுங்கள். மீண்டும் அதே போல் வேறொரு கண்ணாடி கிண்ணத்தில் வைத்து மேலே சொன்னவாறு வைத்து வழிபடலாம்.
குறிப்பாக தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்து வணங்கினால் நமது வீட்டின் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
இதனை அப்படியே ஒரு ஓரத்தில் வைத்து விட்டால் மட்டும் போதாது. அதை தினமும் தொட்டு வணங்கி கொள்ளுங்கள். உங்க வீட்டில் ஏற்படும் மாற்றம் நல்லதாகவே இருக்கும்.
இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள் எல்லாமே நல்லதாகவே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here