சரஸ்வதி பூஜை வீட்டில் செய்வது எப்படி?

0
558

சரஸ்வதி பூஜை வீட்டில் செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நவராத்திரி நாட்களில் வரக்கூடியதுதான் சரஸ்வதி பூஜை. சிலர் வீட்டில் நவராத்திரி கொலு வைத்து வணங்குவார்கள். ஒரு சிலர் வீட்டில் நவராத்திரி கொலு செய்து வணங்கமாட்டார்கள்.
ஆனால் நவராத்திரியில் வரக்கூடிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை அன்றைக்கு வணங்குவார்கள்.
சரஸ்வதி பூஜை இன்றைக்கு என்னென்ன செய்ய வேண்டும். எப்படி வழிபட வேண்டும். ஞானம், கல்வி, புத்திக்கூர்மை, இந்த மூன்றையும் அளிப்பவள் அன்னை சரஸ்வதி ஆகும்.saraswathi
அன்னை சரஸ்வதி தேவியை வணங்குவதால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

தேவைப்படும் பொருட்கள் :

மஞ்சள் தூள்
அருகம்புல்
பூ (மல்லி மற்றும் முல்லை)
வெற்றிலை பாக்கு
வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்
வாழை இலை
அவுல்
பொறி
பொட்டுக்கடலை
வெல்லம்
கொண்டைக்கடலை மற்றும் சூடம் பத்தி சாம்பிராணிசரஸ்வதி தேவி
சரஸ்வதி பூஜை அன்றைய நாளில் நம் வீடுகளை சுத்தப்படுத்தி வீட்டினுள் மஞ்சள் கலந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அப்படி செய்தால் அன்னை வீட்டிற்கு வருவாள் என்பது அர்த்தம்.
சரஸ்வதிபூஜை அன்றைக்கு மாலையில் மஞ்சளில் விநாயகரை பிடித்து அதில் அருகம்புல் வைத்து ஒரு வெற்றிலையில் வைத்து விடவும். பக்கத்தில் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்து விடுங்க.
ஒரு வாழை இலையில் அவுல், பொரி, பொட்டுக்கடலை, வெல்லம் கலந்த கலவையை வைக்கவும். அதில் வேகவைத்த கொண்டைக்கடலை வைத்து விடுங்கள். பழங்கள் வாங்கி இருந்தால் அந்த பழங்களையும் இதில் வையுங்கள்.
வாழைப்பழம் வெற்றிலை பாக்கு
குழந்தைகளின் புத்தகங்கள், உங்கள் கணக்கு வரவு, செலவு நோட்டுகள் வைத்து வீட்டிற்கு சாம்பிராணியை காட்டி வத்தி, சூடம் ஏற்றி வழிபடலாம்.
அன்னை சரஸ்வதி பற்றி பாடல்கள் தெரிந்தால் பாடுங்கள். பாடல்கள் தெரியவில்லை என்றாலும் உங்கள் மனதால் நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.
சரஸ்வதிக்கு தீபாராதனை காட்டிய பிறகு புத்தகம் வைத்து சிறிது நேரம் படிக்க வேண்டும்.
சரஸ்வதிபூஜை அன்று வைத்து நோட், புத்தகம், பேனா பொருட்களை, மறுநாள் காலையில் மீண்டும் சரஸ்வதிக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து தீபாராதனை காட்டிய பிறகுதான் அதில் இருக்கும் பொருட்களை எடுக்க வேண்டும்.
அனைத்துக் காரியமும் வெற்றியுடன் நடக்கும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here