குப்பைமேனி செடி இயற்கை மருத்துவம் !

0
238

குப்பைமேனி செடி இயற்கை மருத்துவம் !

குப்பைமேனி - மருத்துவ பயன்இந்த குப்பைமேனி செடி , குப்பைமேனியின் இலை, வேர் முதற்கொண்டு மருத்துவ குணங்கள் அடங்கியவை ஆகும். இந்த குப்பைமேனிக்கு பல மாநிலங்களில் பலவகையான பெயர்களால் சொல்லி அழைக்கப்படுகிறது.
குப்பை என்றால் நோய்கள், வியாதிகள் என்று அர்த்தம். மேனி என்றால் மனிதஉடல் என்று அர்த்தம். உடலில் இருக்கும் வியாதிகளை போக்க கூடியது என்று அதன் பெயர் விளங்கிற்று என்பதே அதன் அர்த்தம்.
குப்பைமேனி பலருக்கும் தெரியும் உடம்பில் ஏற்படும் அரிப்புக்கு மட்டும் போடக் கூடியது இல்லை.
குப்பைமேனி செடி இயற்கை மருத்துவம் !
இந்த குப்பைமேனி மூலிகையாகவும் பயன்படுகிறது. குப்பைமேனி இலையானது, உடலிலுள்ள புழுக்களை அழிக்கவும், உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, நமிச்சல், தீ காயங்கள் போக்கவும் பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. உடலில் ஏற்படும் கை, கால் குடைச்சல்களையும் போக்கி நிவாரணமளிக்கும்.
இப்போ இந்த மூலிகை எப்படி பயன்படுத்தலாம் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.

சிரங்கு, தீ காயங்கள் :

உடலில் உங்களுக்கு நமிச்சல், தீக்காயங்கள், சொரி, சிரங்கு ஏற்பட்டிருந்தால் குப்பைமேனி இலையை மட்டும் பறித்து அதனுடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அதனுடைய சாறை எடுத்து தேய்க்கவும்.
அப்படி தேய்ப்பதினால் உங்களுக்கு நமிச்சல் அதிகமாக இருக்கும். எரிச்சல் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும். தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.
தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்து

குடல் புழுக்கள் :

குப்பைமேனியின் இலையை மட்டும் பறித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெயிலில் நன்றாக காய்ந்ததும் குப்பைமேனியின் இலையை பொடி செய்து வைத்து விடலாம்.
சிறிதளவு அந்த பொடியை எடுத்து தேனில் குழைத்து வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கொடுக்கவும். அப்படி கொடுப்பதால் குடலில் உள்ள புழுக்கள் மலம் வழியாக வெளியேறிவிடும் குடல் சுத்தமாக மாறிவிடும்.
பெரியவர்கள் குப்பைமேனியின் இலை சாறை எடுத்து சிறிது கொதிநீரில் போட்டு நீங்கள் குடிக்கலாம். உங்கள் குடலில் இருக்கும் புழுக்கள் வெளியேறி விடும். உடலில் ஏற்படும் சோர்வை போக்கி கெட்ட நீரையும் வெளியேற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here