இன்றைய ராசி பலன்கள் 19.10.2018 இந்த ராசிபலனா நீங்க !

0
82

இன்றைய ராசி பலன்கள் 19.10.2018

மேஷம் :

கணவன் மனைவிஇன்றைய ராசி உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். வேலைச்சுமை குறையும். வெளியூர் செல்ல நேரிடும்.

ரிஷபம் :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தெய்வ வழிபாட்டில் அதிகமாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும்.
உங்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் உதவி கேட்டு வந்தால் விலகி விடுங்கள்.

மிதுனம் :

மருத்துவ செலவுகள்இன்று உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மருத்துவ செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக உள்ள பிரச்சனைகள் குறையும்.
உங்க ராசிக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம் :

இன்று உங்கள் ராசிக்கு மதியம் பகல் 2.01 மேல் சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. ஆதலால் கொஞ்சம் கவனமாக இருங்கள். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வையுங்கள்.
வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மன உளைச்சல்கள் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும் உங்களுக்கு. இன்று கவனமாக இருங்கள்.

சிம்மம் :

Non-Performing-Assetsஎதிர்பார்த்த நேரத்தில் வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் தாரமாக தனவரவும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி இன்று எடுக்கலாம். உங்களுக்கு இன்று எதிலும் வெற்றிதான்.

கன்னி :

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் பலன் கிடைக்கும். சக தொழிலாளர்கள் கூட ஒற்றுமையாக வேலை செய்வீர்கள்.
நீண்ட நாள் கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொருட்களும் வந்து சேரும்.

துலாம் :

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் தான் அமையும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் ஏற்படும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சகம் :

உடல்நிலையில் சற்று சோர்வுஇன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

தனுசு :

குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள். சுபகாரிய முயற்சியில் சாதகமாக பலன் உண்டாகும்.
சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் வேலை பார்ப்பவர்கள் அனுகூலம் கிட்டும்.

மகரம் :

உங்கள் தொழில் சம்மந்தமான கருவிகள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் பலன் கிடைக்கும்.
அதனால் வருமானம் இரட்டிப்பாகும். எல்லா காரியத்தையும் மன உறுதியோடு செய்து காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள்.

கும்பம் :

வியாபாரத்தில் இன்று மந்த நிலை இன்று உங்கள் வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் வர நேரிடும். வியாபாரத்தில் இன்று மந்த நிலை ஏற்படும், இருந்தாலும் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
நண்பர்களின் உதவியால் ஏற்பட்ட பிரச்சினைகள் சற்று குறையும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மீனம் :

இன்று உங்களுக்கு அதிகாலையில் எழுந்த சற்று நேரத்திலேயே சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சாதாரணமாக இருக்கும்.
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு துணி, நகைகள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here