வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகைகள் !

0
191

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகைசெடி

நாட்டு மருந்து கடை மூலிகைசெடிநீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டாங்க இனிமே உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை வளர்த்து பாருங்க. எந்த மாதிரியான மூலிகைசெடி எப்படி உங்கள் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் எப்படி பார்ப்போங்க
மூலிகைசெடிகளை சில வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். உங்கள் மருத்துவர் ஆலோசனையும் மேற்கொள்ளவது நல்லது.துளசி

துளசி:-

இது ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகைசெடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது.
இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன.
1) வன துளசி,
2) ராம துளசி,
3)கிருஷ்ணா துளசி,
4) கற்பூர துளசி.
ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.பாசில் மூலிகை

பாசில் மூலிகை :-

ஒரு சிறிய பூந் தொட்டியில் கூட பாசிலை வளர்க்க முடியும். இதுவும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைசெடியாகும். நிறைய மக்கள் இதை சமையலில் பயன்படுத்துகின்றனர். தாய் குஷைன் போன்ற உணவு வகைகளில் பயன்படுத்துகின்றனர்.

வெந்தயம்:-

வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது.

கற்றாழை:-

கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது எங்கு வேணும்னாலும் வளரும். நன்றாக வளர்வதற்கு சூரிய ஒளி தேவை. இது கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும். இதை உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது.புதினா

புதினா :-

இந்த மூலிகைசெடி உலகம் அளவில் எல்லாராலும் வளர்க்கப்படும் முக்கிய செடியாகும். ஒரு சிறிய தொட்டியில் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய இவற்றை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.

வல்லாரை கீரை:-

நம் வீட்டில் வளர்க்க கூடிய ஈஸியான செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வலிமையிக்கும் நினைவாற்றலுக்கும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகும். இந்த சின்ன மூலிகைசெடி அல்சர், சரும பாதிப்பு, இரத்த குழாய் சுருக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது.
நீங்கள் என்றென்றும் இளமையாக இருக்க விரும்பினால் இதை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் போதும். இலைச்சாறு வெளியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பயன்படுகிறது.

வேப்பிலை மூலிகை :-

இது மருத்துவ குணம் வாய்ந்த தாவரமாகும். இது ஒரு மரமாக வளரக் கூடியது. இருப்பினும் வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கியமான மரமாகும். இதில் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன.
இது அகம் மற்றும் புறத்துக்கும் பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. இலைச்சாறு மற்றும் ஆயில் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இந்த பயன்படுத்திலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here