மருதாணி ஆயூர்வேதத்திலும், ஆன்மீகத்திலும் உள்ள அறிவியல் !

0
190
மருதாணி ஆயூர்வேதத்திலும், ஆன்மீகத்திலும்  !

dulhan-mehndi-designsமருதா‌ணியை பெ‌ண்க‌ள் கைக‌ளி‌ல் வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று சொன்னா‌ல் அது தவறான வார்த்தையாகு‌ம். மருதாணி இலை ஒரு கிருமி நாசினி ஆகும்.
கண்ணுக்குப் தெரியாத கிருமிகளை அழித்து நோய்வராமல் தடுக்கிறது.
மாதம் ஒருமுறை பூசிக் கொள்வதால் உடல்நிலை சீராக இருக்கும். மருதாணியை சுக்கிரனின் அம்சம் என்று ஜோதிடம் கூறுகிறது.
வேதத்திலும் மஹாலக்ஷ்மியின் அருள் நிறைந்து உள்ளதாக மருதாணி கூறிப்பிடுகிறார்கள். மருதாணியின் இலையை கொண்டு மஹாலக்ஷ்மி தேவியை அர்ச்சித்தால் லக்ஷ்மி கடாக்ஷம் நிறையும் என்கிறார்கள்.மருதாணி மற்றும் கணவன் மனைவிக்கு
ஜாதகத்தில் சில தோஷங்களை குறிப்பிட்டுவுள்ளனர். அதாவது ஸ்திரி தோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் போன்றவைகள்.
இந்த தோஷங்கள் உள்ள சுமங்கலி பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதாணியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு பூசி வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.
மருதா‌ணியை அரைத்து கை, கால், விரல் நகங்களுக்கு பூசி அழகூட்டுவார்கள். இப்படி மருதா‌ணியை பூசிக் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகசுத்தி வராமலும் தடுக்கலாம். உடலில் ஏற்பட்ட புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.மருதாணி
மருதாணியின் பூக்களைப் பறித்து அதை நன்றாக உலர்த்திய பின் ஒரு தலையணையாக செய்து, வைத்து தூங்கி பாருங்கள். அப்புறம் என்ன நல்லா தூக்கம் வரும்.
மருதாணியின் இலைகளை பறித்து நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் நோய்கள் இருந்தால் குணமாகும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறிய அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி அதை ஒரு சிறிய துணியில் வைத்து கட்டி, தேங்காய் எண்ணெயில் சில நாட்கள் ஊறவிட்டு,
பிறகு அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
தொழுநோய் மற்றும் மேக நோய் இருப்பவர்கள். மருதாணியின் இளந்தளிர், இலை மற்றும் பூக்களையும், பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மேலும் நோய்கள் பரவாமல் தடுக்கும்.
சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பிரச்சனையான வெ‌ள்ளை‌ப்படுதலை சரி செய்ய மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு எடுத்து பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளையென ‌3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல்‌ பிறப்புறுப்பு நோய்களை நீக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here