சனி தோஷம் நீங்க அற்புதமான தீர்வு !

0
456

சனி தோஷம் நீங்க அற்புதமான தீர்வு
சனி தோஷம்சனி கொடுத்தாலும் சரி எடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பவா கிரகம் கருதப்படுகிறார்.
மந்தன் ,மகேசன், ரவி புத்திரன், நோண்டி ,முடவன் ,ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார்.
பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும் ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கம் சனி கிரகம் அவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.சனி தோஷம் நீக்கும் வழிபாடு
சனியின் :-
ஆட்சி வீடு மகரம்,கும்பம்
உச்ச வீடு துலாம் ,
நீச வீடு மேஷம் ,
பகை வீடு சிம்மம்.
சனிக்கு நட்பு கிரகங்கள்:-புதன் ,சுக்கிரன், ராகு ,கேது
சம கிரகம்:- குரு ,
பகை கிரகம்:- சூரியன்,சந்திரன், செவ்வாய் .
பூசம் ,அனுஷம் ,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாக இருக்கார்.சனி திசை 19 வருடங்களாகும்.ஆண் கிரகமும் பெண் கிரகமும்
ஆண் கிரகமும் பெண் கிரகமும் இல்லாமல் அலியாக இருக்கிறார்
சனியின் வாகனம் -காக்கை,எருமை பாஷை -அன்னிய பாஷைகள்
உலோகம் -இரும்பு
வஸ்திரம் -கருப்பு
நிறம் -கருமை
திசை-மேற்கு
தேவதை- யமன்,சாஸ்தா
சமித்து-வன்னி
தானியம் -எள்ளு
புஷ்பம்-கருங்குவளை
சுவை-கசப்பு ஆகும்.
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர் சனிதோஷம் நீங்க சனிக்கிழமைதோறும் விரதமிருந்து சனி பகவான் சன்னதியில் இரண்டு அகல்விளக்குகளை நல்லெண்ணெய் தீபமிட்டு எள்ளன்னம் நைவேத்யம் படைத்து மனமுருக சனி கவசம் சனி அஷ்டோத்திரம் பாராயணம் செய்திடலாம் .முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம் கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.
சனி பகவானை நேருக்கு நேர் வணங்க பக்கவாட்டில் நின்று வணங்க வேண்டும் இவ்வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.திருநள்ளாற்று
திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும் அம்பாளையும் சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவது உளுந்து தானியத்தை தானம் செய்வதும் கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வருவதும் நீலக்கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும் சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணம் செய்வதும் ஏழரை சனியின் தோஷம் குறைக்கும் .
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில் கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில் இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி பின்னர் காலையில் எழுந்து நீராடி சனி பகவானை 108 முறை வலம் வந்து ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும் உளுந்து தானியம் தானம் சனி பகவானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.சனி பகவானின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here