உழவர்களுக்கு உதவும் உழவன் ஆப் பற்றி தெரியுமா?

0
202

உழவர்களுக்கு உதவும் உழவன் செயலி பற்றி தெரியுமா?

உழவன் செயலி என்பது உழவர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய ஒரு செயலி ஆகும். இந்த செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
இந்த உழவன் செயலியில் உழவர்களுக்கு உதவும் வகையில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு தான் இந்த பதிவின் வழியாக நாம் காண இருக்கிறோம்.uzhavan android app

உழவன் செயலி இன் சிறப்பம்சங்கள் :

இந்த உழவன் செயலியானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்க தக்கதாக இருக்கிறது. இந்த உழவன் செயலின் மூலம் விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.farmers helped android apps india
இந்த உழவன் செயலி மூலம் வேளாண்மைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளை முன்பதிவு செய்வதற்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கிறது.
உதாரணமாக டிராக்டர், பவர்டில்லர் போன்ற வேளாண்மை இயந்திரங்களையும் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமை குடில் போன்ற அனைத்தையும் நீங்கள் இதன் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.உழவன் செயலி! விவசாயிகளிடம் விழிப்புணர்வு
இந்த செயலி மூலமாகவே நீங்கள் பயிருக்கு காப்பீடு திட்டம் செய்திருந்தால் அதை பற்றிய முழு விபரங்களையும் நீ இந்த செயலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாது தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் உள்ள விதை இருப்பு விபரங்களையும் நீங்கள் இந்த செயலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.பிறரை வாழ வைத்த உழவன்
மேலும் வேளாண்மைக்கு தேவைப்படும் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் மையங்களில் தொடர்பு கொள்ளும் வசதியும் இந்த செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த உழவன் செயலி மூலம் நீங்கள் ஒன்பது வகையான சேவைகளை பயன்படுத்த இயலும்.
அதாவது விளைப் பொருட்கள் சந்தையில் என்ன விவரங்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை மாற்றங்களை பற்றியும் அதன் நிலவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண்மை விரிவாக்க பணியாளர்கள் வருகை பற்றிய தகவலையும் நீங்கள் இந்த செயலி மூலம் அறிந்துகொள்ள இயலும்.
இந்த செயலியை நீங்கள் கீழே உள்ள லிங்க் வழியே நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி பாருங்கள் இதைப் பற்றிய மேலும் வீடியோ விளக்கம் உங்களுக்கு மிக விரைவில் அளிக்கப்படும்.விவசாயிகளிடம் விழிப்புணர்வு
Download link : http://bit.ly/2JWh5rr
இந்த பதிவை உங்களிடம் சேர்க்க உதவிய சீர்காழி டிவி அவர்களுக்கும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here