அடையார் கே.லட்சுமணன் இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

0
165

அடையார் கே.லட்சுமணன் இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?


Adyar K. Lakshman


அடையார் கே.லட்சுமணன் ஓர் இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியரும் ஆவார். 1933-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்னும் ஊரில் பிறந்தார்.


இவருக்கு வசந்தா லட்சுமணன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


இவர் 1989-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1991-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் மற்றும் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


இவர் 1954-ம் ஆண்டு இவர் பரதநாட்டியம், கர்நாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். மேலும் 1969-ம் ஆண்டு பரதசூடாமணி அகாதமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி பல கலைஞர்களை உருவாக்கினார்.


அடையார் கே.லட்சுமணன்


அது மட்டுமில்லாமல் பரதநாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார்.


இவர் பெரிய பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். பரதசூடாமணி அக்காதமி என்ற நாட்டியப் பள்ளியை நடத்தி வந்தார். அதன் மூலம் பல நாட்டியக் கலைஞர்களை உருவாக்கினார்.


இவர் திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவியவர் தான் அடையாறு கே.லட்சுமணன்.


வருணபுரி குறவஞ்சி, ஆய்ச்சியார் குரவை போன்ற பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார்.


அடையாறு கே. லட்சுமணன் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது 80-வது வயதில் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here