ஐயப்ப பக்தர்கள் எத்தனை நாட்களில் விரதத்தை முடிக்கலாம்?

0
80

ஐயப்ப பக்தர்கள் எத்தனை நாட்களில் விரதத்தை முடிக்கலாம்?


ஐயப்ப ஸ்லோகம் :


Ayyappa Devotional


1. ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம


2 . ஓம் அர்ஜுநேசாய நம


3 ஓம் அக்னிநயநாய நம


4 ஓம் அநங்க மதனாதுராய நம


ஐயப்பன்


5 ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம


6 ஓம் ஸ்ரீ தாய நம


7 ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ தாய நம


8 ஓம் கஸ்தூரி திலகாய நம


9 ஓம் ராஜசேகராய நம


10 ஓம் ராஜ ஸத்தமாய நம.


சபரிமலையில் எழுந்து அருள்புரியும் ஐயப்பனுக்கு உகந்தது கார்த்திகை மாதமாகும். சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒரு புறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர்.


சபரிமலையில்


உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.


இந்த கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரத்தை மேற்கொள்வார்கள். 48 நாட்கள் விரதமிருந்து மார்கழியில் ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.


41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்கள் 41 நாட்கள் விரதம் போதுமானது.


ஐயப்பப் பக்தர்கள் கோவிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14-ம் தேதி வரை பிரம்மச்சார்ய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். இதனால் ஐயப்பனின் அருளை முழுமையாக நாம் பெறலாம்.


சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கும். ஜனவரி 14-ம் தேதி அன்று மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சாரிய விரதம் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here