பனை மரத்தின் பனஞ்சர்க்கரை உட்கொண்டியிருக்கிறீர்களா!

0
185

பனை மரத்தின் பனஞ்சர்க்கரை உட்கொண்டியிருக்கிறீர்களா!


பனஞ்சர்க்கரை


பனைமரம் வளர்ப்பதற்கு பெரிதும் நாம் எந்தவித செலவும் செய்யத் தேவையில்லை. நடவு செய்யாமல் வளரும் மரத்தில் ஒன்று இந்த பனைமரம். பனை மரத்தின் நிழல் மிக குளிர்ச்சியானது.


பனஞ்சர்க்கரை பனைமரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் பனைமரத்திலிருந்து கள்ளு, தெளுவு, நுங்கு, பனம்பழம், கீத்துமட்டை, விறகு என அனைத்து வகைகளிலும் நமக்கு பயன்படுகிறது.


இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த பனைமரத்தின் பனைநீரிலிருந்து கிடைப்பது தான் பனஞ்சர்க்கரை.


பனைமரத்தின் பயன்கள் எப்படி அளவில்லாததோ அதுபோல அதன் மூலம் கிடைக்கும் பொருட்களும் அளவில்லாத நன்மைகளை கொண்டது.


பனை மரத்தின் நிழல்


  1. பனஞ்சர்க்கரையில் அதிக அளவிலான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘பி” மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுக்கிறது.
  2. குழந்தைகளுக்கு நல்ல ஒரு இயற்கை மருந்தாகும்.
  3. பனஞ்சர்க்கரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
  4. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
  5. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்கும். அதேபோல் பருவமடைந்த பெண்களுக்கு உளுந்துடன் பனஞ்சர்க்கரை சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுப்பதனால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
  6. குப்பைமேனி கீரையுடன் பனஞ்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நீண்டநாள் சளி தொல்லை நீங்கும்.
  7. சீரகத்துடன், பனஞ்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
  8. பனஞ்சர்க்கரையுடன், ஓமம் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
  9. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி சாதத்துடன் பனஞ்சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here