விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்!

0
111

shiva-viratham benefits விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்!


நாம் மனதால் ஒன்றை நினைத்து விரதம் எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் விரதம் எடுக்கலாம். எந்த ஒரு விரதமும் நம் முழுமனதுடன் தான் எடுக்க வேண்டும்.


நீங்கள் விரதம் இருக்கும் நாளில் காலைலேயே தலைக்கு குளித்துவிட்டு முதலில் வீட்டில் விளக்கு ஏற்றி மனதால் நம் வேண்டுதலை முழுமனதுடன் வேண்டிக் கொள்ளுங்கள்.


விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்


உங்களால் காலை உணவு சாப்பிடாமல் இருக்க முடியும் என்றால் அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


அப்படி இல்லாமல் நீங்க சாப்பாட்டை நினைத்துக் கொண்டே இருந்தால் அது மிகையல்ல.


விரத வழிபாட்டின் பலன்


மதியத்தில் சமைக்கும் உணவை எச்சில் படாமல் சமைத்து, காக்காய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு, பிறகு நீங்கள் சாப்பிடலாம்.


அப்படி செய்வதால் அந்த சாப்பாடு முதலில் கடவுளுக்கு கொடுத்துவிட்டு பிறகு நாம் சாப்பிடுவதற்கு சமம் ஆகிறது.


மாலை நேரத்தில் கோவில்களுக்கு செல்லனும் என்று நினைப்பவர்கள் சென்று, கோயில்களில் விளக்கு ஏற்றி கடவுளை வணங்கி வரலாம்.


முடியாதவர்கள் வீட்டிலே விளக்கேற்றி ஓம்….. ஓம்….. ஓம்….. என்ற மந்திரத்தை சொல்லி கொண்டே விரதத்தை நிறைவுக் கொள்ளலாம்.


நீங்கள் இதைப் படித்துவிட்டு யோசிக்கலாம். இவர்கள் என்ன இப்படி விரதத்தை மேற்கொள்ள சொல்கிறார்கள் என்று,


விரதம் எடுக்கணும் என்று நினைத்தாலே அன்று ஒரு நாளாவது மட்டும் கடவுளை நினைத்துக் கொண்டே இருந்தால் நீங்கள் விரதத்தை சரியாக செய்து உள்ளீர்கள் என்று கூறப்படுகிறது.


விநாயகர் சஷ்டி விரதம்


நாம் எப்போதுமே நமக்குள்ள பிரச்சினைகளை யோசித்தே நம் வாழ்க்கை ஓடுகிறது.


நீங்கள் விரதம் இருக்கும் நாட்களில் இப்படி செய்து பாருங்கள். மனம் அமைதியாகவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கும் என்ற நிம்மதியும் உங்களுக்கு ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here