அம்மாம் பச்சரிசி மூலிகை செடி பற்றி உங்களுக்கு தெரியுமா?

0
197

அம்மாம் பச்சரிசி மூலிகை செடி பற்றி உங்களுக்கு தெரியுமா?


Amman-pachsarisi


அது என்ன அம்மாம் பச்சரிசி செடி என்று பார்க்கிறீர்களா….. இந்த அம்மாம் பச்சரிசி செடி மூலிகை செடியில் ஒன்றானது. இந்த மூலிகை பல இடங்களில் நம் கண்ணுக்குத் தெரிகின்ற இடங்களில் அதிகமாக வளர்ந்து வருகின்றன.


ஆனால் இந்தச் செடியின் மகத்துவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய நிலையில் உள்ளது.


கருத்தரிக்க :
சில பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை இருக்கும். சில பெண்களின் உடலில் விந்தணு தங்காமல் வெளியேறி விடுகின்றன. அந்த பெண்கள் இந்த அம்மாம்பச்சரிசி செடியின் இலைகளில் ஒரு 10-ம்,


pachsarisi


இலந்தை இலை ஒரு 5-ம், சின்ன வெங்காயம் 2 இந்த மூன்றையும் நன்றாக அரைத்து பெண்கள் மாதவிடாய் ஏற்பட்ட மூன்றாம் நாளில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு அன்றிலிருந்து தன் கணவருடன் சேர்ந்திருக்க வேண்டும்.


முகத்தில் மருக்கள் போக :
அந்த  பச்சரிசி மூலிகை செடியில் இருக்கும் பாலானது நம் முகத்தில் இருக்கும் மருக்களை போக்க வல்லது.


அம்மாம் பச்சரிசி செடியின் நடுவில் உடைக்கும் போது அதிலிருந்து பால் வெளிப்படும் அந்தப் பாலை முகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலும் இருக்கும்


மருக்களுக்கு மட்டும் இந்தப் பாலை தொடர்ந்து ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு வைத்து வந்தால் கண்டிப்பாக மருக்கள் கீழே விழுந்து விடும். அங்கே மருக்கள் இருந்த அடையாளமே தெரியாமல் மாறிவிடும்.


ஆனிக்கால் :
ஆனிக்கால் உள்ளவர்களும் இந்த பச்சரிசி செடியின் பாலை ஆனிக்கால் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் அதிலிருந்து விடுப்பட்டு உங்கள் கால்கள் சரியாகிவிடும்.


இந்த செடியின் இலைகளை சாப்பிடுவதனால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடலில் பால் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆடுகள் மற்றும் மாடுகளுக்கும் இதை உண்பதற்கு கொடுக்கலாம்.


நன்றி!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here