காய்ச்சல் வருவதற்கான காரணங்கள் இதான் !

0
169

டெங்கு காய்ச்சல்


தற்போது அதிகமாக மக்களை தாக்கி வரும் நோய் தான் டெங்கு. இது பருவநிலை மாற்றங்களினால் மக்களுக்கு பல நோய்கள் வர காரணமாகின்றன. இதில் டெங்கு காய்ச்சலானது பகலில் கடிக்கும் கொசுக்களின் மூலம் தான் அதிகமாக பரவுகிறது.


ஏனெனில் இந்த காய்ச்சலை பரப்பும் கொசுவானது பகலில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டது.


காய்ச்சல் அறிகுறிகள் :


ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து சில மணி நேரத்தில் காய்ச்சல் வரும். காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். டெங்கு காய்ச்சலால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும்.


டெங்கு


மலைவேம்பு சாறு :


மலைவேம்பு இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 10 மில்லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருக வேண்டும்.


பப்பாளி சாறு :


பப்பாளி இலைகளை பறித்து அதில் இருக்கும் காம்புகளை அகற்றிவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றினை 10 மில்லி என்ற கணக்கில் நாளொன்றுக்கு 4-5 முறை குடித்து வர வேண்டும்.


புரோட்டீன் உணவுகள் :


பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.
இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.


நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம்.


இந்த கொசு மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில் எங்கு எல்லாம் தண்ணீர் தேங்குமோ அந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யும்.


பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.


குடும்பத்தைக் காக்க வேண்டும் என்றால்?… உங்க வீட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here