உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும் பசலைக் கீரை

0
194

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும் பசலை கீரை


Secret, Herbal Medicine, Herb


நம்மில் சிலருக்கு சில வகை கீரைகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவது உண்டு. அதில் முருங்கைக் கீரை, முளைக்கீரை மட்டுமே அதிகபட்சமாக விரும்பி சாப்பிடுக்கின்றோம். கீரைகளின் வகைகள் எண்ணற்றவை உள்ளன. இதில் பசலைக் கீரையும் ஒன்றாகும். சிலர் பசலைக் கீரை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு அதனால் சளி, வீசிங், ஆஸ்துமா அதிகம் உண்டாகும் என்பதால் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள்.


ஆனால் பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து, உப்பின் காரச்சத்தும் ஆகிய இந்த சத்துக்களை உள்ளடக்கியது தான் பசலைக்கீரை. இந்த பசலைக்கீரையை எந்த வகையிலும் உணவாக செய்து சாப்பிடலாம்.


பசலைக்கீரையை உட்கொள்வதால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.


பசலைக் கீரை


இந்த பசலைக் கீரையை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் நீர் கோர்த்து இருப்பது சரியாகிவிடும்.


ஆண்களுக்கு விந்து தயிர் போல் கெட்டியாகவும் பசலைக்கீரை உதவி செய்கின்றன.


தலைவலிக்கு பசலைக்கீரையை நெருப்பில் லேசாக வாட்டி தலைக்கு பற்று போட்டால் சரியாகும்.


பசலைக் கீரையில் கலோரிகள் குறைந்து காணப்படுவதால் குண்டானவர்கள் சாப்பிடுவதினால் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.


உடலில் ரத்தசோகையை நீக்கவும் பசலைக்கீரை சரி செய்கிறது.


குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பசலைக் கீரையை உணவில் சேர்த்து கொடுப்பதினால் அவர்களுக்கு பால் அதிகரிக்க செய்யும்.


இந்த பசலைக் கீரையை சாப்பிடுவதால் உடலில் ஏற்பட்டுள்ள தோல் நோய்களின் வீரியம் தன்மையை குறைக்கும்.


இந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளடக்கிய பசலைக்கீரையை ஒதுக்க வேண்டுமா? வாரத்திலோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கும் உணவில் சேர்த்து சாப்பிடுங்கள். உங்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here