கூகுள் நிறுவனதால் டிரைவரிடம் கேட்க வேண்டாம் !

0
173

Google Map Manager tamil


Google Map Manager tamil


கூகுள் (Google ) நிறுவனம் ஆட்டோவில் பயணிக்கும் செலவினை அதன் டிரைவரிடம் கேட்காமல், தெரிந்து கொள்ளலாம்


கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து தான் வருகிறது.


இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று கூகுள் மேப் மேனேஜர் விஷால் தத் அவர்கள் தெரிவித்துள்ளார்.


என்னன்னு கேட்கிறீர்களா?….
நாம் கூகுள் மேப் இதுவரை பயன்படுத்தி தான் வருகின்றோம். இந்திலையில் கூகுள் நிறுவனம் மேப்பில் ()புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.


கூகுள் மேப்


கூகிள் மேப்பில் வழங்கிய புதிய அப்டேட் என்னவென்றால் ஆட்டோவில் பயணம் செய்யும்போதே ஆட்டோவிற்காக பயண கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.


புதிய அப்டேட் வரக் காரணம்?….
தற்சமயம் வரை பயணிகள் தங்கள் பயணத்துக்கான கட்டணம் தெரியாமல் தான் பயணிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிகப்படியான கட்டணத்தை அளித்து வருகின்றனர்.


இதை தவிர்க்க பயணியர்களை மனதில் வைத்து பயணிகள் செல்லும் பயணத்தை திட்டமிடவும் முன்கூட்டியே தங்கள் இந்த பதிவு அப்டேட் உதவும் என்று தெரிவித்துள்ளார்.


நடைமுறையில் உள்ளதா?…
ஆம்…. தற்போது இந்த புதிய வசதி நடைமுறையில் தான் இருக்கிறது. ஆனால் இப்பவே டெல்லிக்கு மட்டும்தான்.


டெல்லியில் தற்சமயம் கூகுள் மேப்பில் (Google map)வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் பயன்படுத்த முடியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் என்கிறார்கள்.


அதிகாரப்பூர்வ வரைப்படம் :
இது டெல்லி போக்குவரத்துத் துறை போலீசார் வழங்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வைத்து டெல்லி google மேப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கூகுள் மேப்பில் புதிய அப்டேட் வசதியை பெற (பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் மோடு) தேர்வு செய்ய வேண்டும். கூகுள் மேப்பில் பயணக்கட்டணம் வசதியுடன் (Cab Mode) என்பதும் இணைக்கப்பட்டுள்ளது.


ஆட்டோவில் பயணிக்கும் விரும்புபவர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் இடத்திற்கான ரூட் மேப் மற்றும் பயணக் கட்டணம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here