உங்கள் முகத்தை பார்த்தால்….. உங்களுக்கு கவலையாக உள்ளதா…..

0
103

உங்கள் முகத்தை பார்த்தால்….. உங்களுக்கு கவலையாக உள்ளதா…..


Homemade-Pimple-treatment


சிலருக்கு கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் அவர்களுக்கு ஆரம்ப பருவநிலை காலத்திலிருந்தே இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமாக மாத்திரை உட்கொள்வது மற்றும் வேலையின் காரணமாக கூட அவர்களின் முகத்தில் இந்த விதமான பாதிப்புகள் ஏற்படும்.


இதனால் பல பெண்கள் சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கத்தான் செய்கிறார்கள்.


இந்த பிரச்சினையான சூழ்நிலையில் வீட்டிலேயே கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை தடுக்க எளிமையாக வீட்டு வைத்தியம் செய்து விடலாம்.


உடலில் வைட்டமின் E குறைபாட்டினாலும் இவைகள் வரக்கூடும். நீங்கள் வைட்டமின் ஈ கொண்ட பாதாம் எண்ணெய் போன்றவைகளை முகத்தில் பூசியும் அல்லது வைட்டமின் E அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதினால் இதனை சரி செய்யவும் முடியும். கரும்புள்ளிகளை லேசாக இந்த முறையை பின்பற்றவும்.


Vitamin E Banner


வேப்பிலையும் மஞ்சளும் :
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையும் மற்றும் சிறிய மஞ்சள் கிழங்கையும் சேர்த்து நன்றாக அரைத்து.


அந்த விழுதுடன் சிறிது பன்னீரையும் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கிவிடும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம் .


இதில் மஞ்சள் கிழங்கு சேர்த்தால் ரொம்ப நல்லது. இல்லையென்றால் மஞ்சள் தூள் சேர்த்துக்கலாம்.


எலுமிச்சை சாறு


எலுமிச்சை சாறு :
எலுமிச்சை சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாற்றில் தண்ணீர் விட்டு கலக்கி உபயோகிக்கவும்.


பிறகு பருத்தி போன்ற பஞ்சினால் எலுமிச்சை சாற்றில் நனைத்து கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மீது எலுமிச்சை சாறு ஒத்தி ஒத்தி வைக்க வேண்டும்.


காய்ந்ததும் நீரினால் கழுவ தழும்புகள், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.


சோற்றுக்கற்றாழை :


ஒரு டேபிள்ஸ்பூன் மோர், கொஞ்சம் சில துளிகள் பன்னீர் மற்றும் சிறியதாக ஒரு சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.


வெள்ளரிக்காய் :


வெள்ளரிக்காய் :
ஒரு சில துண்டு வெள்ளரிக்காயை அரைத்து அதில் சிறிது பன்னீரையும் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.


பப்பாளி :
ஒரு பப்பாளி எடுத்துக்கொள்ளவும். அதை நறுக்கி கூழாக செய்து முகத்தில் தடவி 10 லிருந்து 15 நிமிடம் நன்கு காய வைத்து விட்டு, பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here