இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா?

0
194

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா?


India's first female president


இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் ஆவார். பிரதீபா பாட்டில் 1934-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள நத்கோன் என்ற கிராமத்தில் பிறந்தார்.


2007-ம் ஆண்டு முதல் பெண் குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.


அம்மையார் அவர்கள் ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.


இவரது 27-வது வயதில், இவர் ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


President Pratibha Patil


நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, இவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இவர் 1967-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகவும் பணியாற்றினார். அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்துள்ளார்.


பொது சுகாதாரத்துறையிலிருந்து சுற்றுலாத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் செயல்பட்டார்.


ராஜஸ்தான் கவர்னராகப்


நவம்பர் மாதம் 8-ந் தேதி 2004-ம் ஆண்டில் அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்றார். இவர் ஜூன் மாதம் 2007 வரை அப்பதவியில் இருந்தார்.


2007-ஆம் ஆண்டு ஜூலை 25-ல் இருந்து 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை இந்தியாவின் 12-வது முதலாவது பெண் குடியரசு தலைவராகப் பதவி வகித்தார்.


இதேபோல், 1997-ம் ஆண்டு இதே தேதியில் இந்தியாவின் 10-வது குடியரசு தலைவராக கே.ஆர்.நாராயணன் பதவியேற்றுக் கொண்டார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்த பெருமை இவரையேச் சாரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here