ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக்சர்ஸ் சர்பிரைஸ்…..

0
191

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக்சர்ஸ் சர்பிரைஸ்…..


Vijay Sethupathi with Rajini


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி காந்த் நடித்த பேட்ட திரைப்படம். இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளர்.


பேட்ட படத்தில் வரும் ரஜினியின் புதுப்புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் இந்த ட்வீட்டை 1,000 முறை ரீட்வீட் செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்து ட்வீட் செய்தது சன் பிக்சர்ஸ்.


படம் நிச்சயம் ரஜினியின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


PETTA | Surpirice


இந்நிலையில் சசிகுமார் கதாபாத்திரத்தின் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.


சன் பிக்சர் வியப்பில் :பேட்ட படத்தின் போட்டோக்களை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் செய்த வேலையை பார்த்த சன் பிக்சர் வியப்பில் உள்ளது.


ரசிகர்களின் ஆர்வம் :சன் பிக்சர்ஸ் கேட்டதோ ஆயிரம் ரீட்வீட் ஆனால் ரசிகர்களோ மடமடவென 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை ரீட்வீட் செய்து அசத்திவிட்டனர். இதையடுத்து ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.


மீண்டும் 90-லில் :
சன் பிக்சர்ஸ் வெளியிடப்பட்டுள்ள போட்டோக்களில் 90-ம் ஆண்டில் இருந்த ரஜினிகாந்த் போல் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் உள்ளார்.


ரீலிஸ் :
பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தினை எதிர்பார்த்து உள்ளனர்.


மகிழ்ச்சி :
சில நடிகர்களின் ரசிகர்கள் படம் குறித்து அப்டேட் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸோ அடிக்கடி இப்படி ஏதாவது சர்பிரைஸ் கொடுத்துக் கொண்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here