அதிர்ச்சி!…. அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களில் கலப்படமா?…..!

0
202

அதிர்ச்சி!…. அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களில் கலப்படமா?…..

 கலப்படம்சென்னையில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி என்று பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர். பால் முதல் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் வரை அனைத்திலும் எப்படியொல்லாம் கலப்படம் நடக்கிறது.

பால் :

ரு 10 மில்லி பாலில் பத்து மில்லி தண்ணீர் சேர்த்து குளு க்கி கலக்கினால் அதில் பால் தடிமன் படலமாக மாறிவிட்டால், அந்த பாலில் சலவைத்தூள் கலந்து இருப்பதை அறியலாம்.நெய் மற்றும் வெண்ணை

நெய் மற்றும் வெண்ணை :

நெய் மற்றும் வெண்ணையில் உருளைக்கிழங்கு மற்றும் ஸ்டார்ச் மாவு கலக்கப்பட்ட இருப்பதை கண்டறிய அரை தேக்கரண்டி நெய் மீது மூன்று சொட்டுகள் டிஞ்சர் விட்டால், நெய் நீலமாக மாறும்.
தேனில் சர்க்கரை கரைசல் கலந்துள்ளதை கண்டறிய. நீருடன் கலந்தால் உண்மையான தேன் நீருடன் கரையாது. அதுவே சர்க்கரை வெல்லமாக இருந்தல் கரைந்து நேரில் பார்க்கும்போது தெரிந்து விடும்.

பருப்புகள் :

புரதச்சத்து மிக்க முழு பருப்பில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கேசரி பருப்பு கலக்கப்பட்டிருந்தால், அந்த பருப்பு சதுர வடிவிலும் காணப்படும். சற்று நன்றாக உற்று நோக்கினால் இதைக் கண்டறியலாம்.

பச்சை மிளகாய், பட்டாணி :

பச்சை மிளகாய் மற்றும் பட்டாணியில் ரசாயன கலவை இருந்தால், அதன் மீது நீர் அல்லது தாவர எண்ணெயில் நனைத்த பருத்தி பஞ்சை வைத்து தேய்த்தாள் நிறம் வந்துவிடும்.

மிளகு :

மிளகிள் பப்பாளி கலக்கப்பட்ட இருப்பதை அறிய தண்ணீரில் போட்டால் பப்பாளி விதையை நீரில் மிதக்கும். கலக்கப்பட்டவில்லை என்றால் நீரில் போட்டால் அது மெல்லிய பண்ணக்கூடாது இறங்குவதைக் காணலாம்.

மிளகாய் தூள் :

மிளகாய் தூளில் மரப்பொடி கலக்கப்பட்டிருந்தால், தண்ணீரில் மரத்தூள் மேற்பரப்பில் மிதக்கும்.

கடுகு :

கடுகிள் பிரம்மதண்டு விதைகள் கலக்கப்பட்டிருந்தால் சொரசொரப்பான மேற்பரப்புடன் உள்பகுதியில் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒரிஜினல் கடுகு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கிழங்கு மஞ்சள் :

மஞ்சளில் லெட் குரோமேட் என்ற ரசாயன கலவை கலக்கப்பட்டிருந்தால் நீரில் போடும் போது நீர் மஞ்சள் நிறமாக மாறும். ஒரிஜினல் மஞ்சள் என்றால் நீர் நிறம் மாறாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here