பனிக்காலத்தில் பச்சைப் பட்டாணியின் அவசியம் !

0
142

பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணி வடிவில் சிறியதாக தான் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் பிடித்தமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. பச்சைப் பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது.
குழந்தைகளுக்கு பட்டாணியை சும்மா வேக வைத்து கொடுத்தால் உடனே வாங்கி சாப்பிடுவார்கள். பச்சைப் பட்டாணி குழந்தைகளுக்கு மட்டும் இல்லை ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் பிடித்தமான ஒன்று.
குளிர்காலம் வந்துவிட்டாலே தினமும் பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதில் அனைத்து விதமான சத்துகளும் காய்கறிகளுக்கு சமமாக அடங்கியுள்ளது என்பதால்.
Green peas
மலச்சிக்கல் :
இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பட்டாணியின் சத்துக்கள் :
இதில்
மாங்கனீஸ்,
பொட்டாசியம்,
கால்சியம்
இரும்புச் சத்து,
போலேட்,
தயமின்,
நார்ச்சத்து,
புரோட்டீன்,
விட்டமின் ஏ மற்றும்
விட்டமின் கே
போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
உடல் எடை குறைக்க :
இதில் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் நமக்கு உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
green peas benefits weight loss
இதன் நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. பட்டாணியில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.
இதய துடிப்பு :
இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. எப்படின்னு கோட்குறீங்களா?. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
(குறள்  :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
விளக்க உரை :
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here