அதிசயம்…… ஆனால் உண்மை….எதை கூறுகிறேன் தெரியுமா ?

0
101

அதிசயம் …… ஆனால் உண்மை….
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது,
குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமாக இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.
கங்கை கொண்ட சோழபுரம்
ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். அந்த சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்.
அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது யாருக்கும் தெரியாது.
தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்து விடப்படும் பன்றி.
கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக்குள் தானாகவே தலையை மூழ்கி இறந்து விடுமாம்.
விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா்.
அதன் பின் எத்தனை பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்து கொண்டே இருக்கிறது.
அத்திாி மலை
இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரி அன்று கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடை சுடுகிறாரராம் ஒரு பாட்டி.
இதை போல் நிறைய அதிசயங்கள் பல கோவில்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here