சபரிமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாதது…….!

0
284

மார்கழிமார்கழி மாதம் பிறந்து விட்டன. சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகையில் மாலை அணிந்தவர்கள். இந்த மார்கழி மாதத்தில் தான் சபரிமலைக்கு செல்வார்கள்.
இத்தனை நாட்கள் விரதம் எடுத்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் செய்யக் கூடாத சில செயல்களும் உள்ளன.
சொன்னதும் பயப்படாதீர்கள்!
அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் சபரிமலையில் என்னென்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம். இதனால் நாம் சுத்தமாக இருப்போம்.
சபரிமலை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். தெரியாமல் செய்திருந்தால் இனி இந்த தவறுகளை மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காகவே உங்களுக்காகவும், எனக்காகவும் ஒரு பதிவு.sabarimala devotees rules

சபரிமலை பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாதது…….

1. ஐயப்பனுக்கு இருமுடிக்கட்டு இல்லாமல் 18-ம் படி ஏறக்கூடாது.
2. கற்பூர ஆராதனை செய்பவர்கள் தீயை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடாது.
3. சரங்குத்தியில் தான் சரங்குச்சிகளை சமர்ப்பிக்கவேண்டும். வேறு எந்தப் பகுதியிலும் அவற்றை போடக்கூடாது.
4. சாப்பிட்ட பின் இலைகள் மற்றும் கழிவுகளை பம்பை நதியில் போடக்கூடாது.
5. பக்தர்கள் அடுப்பு வைத்து சமையல் செய்து முடிந்த பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.
6. பக்தர்கள் புகைப்பிடிக்கக்கூடாது.
7. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
8. புனிதமான பம்பை நதியை அசுத்தப்படுத்தக் கூடாது.
9. உடுத்திய ஆடைகளை பம்பை நதியில் களையக்கூடாது.
10. 18-ம் படி மீது தேங்காய்களை வீசி உடைக்கக்கூடாது.
11. தேங்காய்களை உடைக்க 18-ம் படியின் அருகிலேயே தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட செயல்களை இனி தவிர்த்துவிடுங்கள்.
நன்றி!……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here