ஏன்?…. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலம் போடுகிறார்கள் !

0
373

ஏன்?…. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலம் போடுகிறார்கள்…….

margazhi month kolamமார்கழி என்றால் தனிச் சிறப்புதான். மார்கழி மாதம் வந்தாலே அனைத்து மங்கையருக்கும் கோலம்தான் நினைவுக்கு வரும். இந்த மாதம் கோலத்திற்கு உகந்த மாதம் என்றும் சொல்லலாம். எல்லா நாளும் கோலம் போடுவார்கள்.
காலையில் பெருமாளை வணங்குவதற்கு சிறந்த மாதமாகவும் இதை கூறுகிறார்கள். கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது.
கோலம் மனமகிழ்ச்சியை தரும். அமாவாசை தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு.
அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.Margazhi colour kolam
வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும். நல்ல காற்று ஓசோன் வாயு கிடைக்கிறது.
ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.
முன்னோர்கள் காலத்தில் :
அக்காலத்தில் அரிசி மாவால் தான் வீட்டின் வாசலில் கோலம் போடுவார்கள். கோலங்கள் போடுவதால் தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பித்துருக்கள் வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும், அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும்.வீட்டின் வாசலில் கோலம்

காலை எழுந்தால் என்ன நடக்கும்…..

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதால், நமக்கு குளிர் போய், கதிரவன் ஒளி கிடைக்கிறது.
இதனால் உடலுக்கு உடற்பயிற்சி செய்த பயன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் எங்கும் நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
கோலம் :
ஊருக்கு முன் வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,
அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள். கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here