அதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….!

0
338

அதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்(miracle-temple-tamilnadu)…….

miracle-temple :  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் எப்போதும் புளிப்பதில்லை.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன், அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.
அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்து விடுகிறதாம்.
திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவு மற்றும் பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கும்.
திருக்கழுக்குன்றம் கோவிலில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயமும் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்து விட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறதாம்.
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறதாம்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here